ADDED : அக் 31, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே மருதங்கநல்லுார் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு இருபிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒரு பிரிவினர் கொடியை அவமதித்ததாகவும், பதிலுக்கு மற்றொரு பிரிவினரும் கொடியை அவமதித்துள்ளனர்.
ஒரு தரப்பை சேர்ந்த சிலர் பஞ்சரத்தினத்தை தாக்கினர். இதனை கண்டித்து கமுதி - முதுகுளத்துார் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதுகுளத்துார் டி.எஸ்.பி., சண்முகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் கலைந்து சென்றனர். பஞ்சரத்தினம் முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருதங்கநல்லுார் கிராமத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

