
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன், செய்யது அம்மாள் கலை -அறிவியல் கல்லுாரி இணைந்து நடத்திய 25வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் பாத்திமா சானஸ்பரூக் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் செஸ் அசோசியேஷன் செயலாளர் ரமேஷ் வரவேற்றார். பல்வேறு பிரிவுகளாக வயது அடிப்படையில் போட்டிகள் நடந்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு ஹாக்கி வீரர் சரவணக்குமார் கோப்பை, சான்றிதழ் வழங்கினார். முதல்வர் பாலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், செஸ் அசோசியேஷன் துணைத்தலைவர் தேவி உலகராஜ், பொருளாளர் குணசேகரன், துணைச்செயலாளர் ராஜன், ஒய்.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் வள்ளிவிநாயகம், உடற்கல்வி இயக்குநர் சவேரியார் உட்பட பலர் பங்கேற்றனர்.

