ADDED : பிப் 27, 2024 07:19 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன், முகமது சதக் ஹமீது கலை அறிவியல் மகளிர் கல்லுாரி சார்பில் கல்லுாரி வளாகத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
முதல்வர் மீரா தலைமை வகித்தார். செஸ் அசோசியேஷன் மாவட்ட தலைவர் சுந்தரம், செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். 7, 9, 13 வயது பிரிவுகளில் ஆண், பெண் என தனித்தனியாக போட்டிகள் நடந்தது.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், தமிழ்நாடு சதுரங்ககழக மாநில இணை செயலாளர் கண்ணன், செஸ் அசோசியேஷன் துணைத் தலைவர் தேவி பங்கேற்றனர்.
