ADDED : மார் 24, 2026 08:13 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் 29-வது மாவட்ட அளவிலான செஸ் (சதுங்ரங்கம்) போட்டி போதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன், போதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி, ராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட் இணைந்து நடத்தினர். செஸ் அசோசியேஷன் துணை தலைவர் சுசரிதா லெனின், பள்ளி இயக்குனர் அகிலன், முதல்வர் ஜெயந்தி, காந்திமதி அறக்கட்டளை தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தனர். மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் சுந்தரம் வரவேற்றார்.
மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
---
