/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் அறிவிப்பின்றி மூடல்: மக்கள் ஏமாற்றம்
/
மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் அறிவிப்பின்றி மூடல்: மக்கள் ஏமாற்றம்
மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் அறிவிப்பின்றி மூடல்: மக்கள் ஏமாற்றம்
மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் அறிவிப்பின்றி மூடல்: மக்கள் ஏமாற்றம்
ADDED : ஜன 30, 2024 12:12 AM

ராமநாதபுரம், - ராமநாதபுரத்தில் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலரின் அலுவலகம் முன் அறிவிப்பு இன்றி நேற்று பூட்டிகிடந்ததால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ராமநாதபுரம் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் 100 மெட்ரிக் பள்ளிகள், 136 நர்சரிகள், 20 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன.
தினமும் பல்வேறு பணிகளுக்காக மாவட்டத்திலிருந்து தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் மதுரையில் நேற்று (ஜன.29) நடந்த 'பெற்றோரை கொண்டாடுவோம்' எனும் நிகழ்ச்சிக்கு தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் சென்றுவிட்டனர்.
இதனால் அலுவலகம் விடுமுறை தினத்தை போல பூட்டிக்கிடந்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி அலுவலக வேலை நிமித்தமாக வந்தவர்கள் பதில் சொல்ல கூட ஆளின்றி அலுவலகம் பூட்டி இருந்தால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.