/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பறக்கும் படை பறிமுதல் செய்த பணத்தை திரும்ப பெற மாவட்டக் குறைதீர் கமிட்டி

ADDED : மார் 19, 2024 10:43 PM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் காரணமாக பறிமுதல் செய்யப்படும் பணம், பொருட்களை உரிய ஆவணங்களை கொடுத்து திரும்ப பெற மாவட்டக் குறைதீர் கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது.
கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளதாவது: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
மக்கள் வியாபாரிகள் பணமாக ரூ.50 ஆயிரத்திற்கு மேல், பொருளாக ரூ.10 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லும் போது உரிய ஆவணங்கள், ஆதாரங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
ஆதாரம், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கஜானாவில் ஒப்படைக்கப்படும்.
பறிமுதல் செய்யப்படும் பணம், பொருட்களை திரும்ப பெற மாவட்ட குறை தீர் கமிட்டி முன்பு உரிய ஆவணங்கள், ஆதாரங்களை சமர்ப்பித்து திரும்ப பெறலாம்.
இந்த கமிட்டியின் தலைவராக கூடுதல் கலெக்டர் வளர்ச்சிப்பிரிவு வீரபிரதாப் சிங், உறுப்பினர்களாக மாவட்ட கருவூலக அலுவலர் கே.பெருமாள், 99409 73906, கன்வீனராக ஜி.கணேசன், 94444 18849, ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் கலெக்டர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை வழங்கி பறிமுதல் பணம், பொருட்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றார்.-------