/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட ஹேண்ட்பால் பரிசளிப்பு விழா
/
மாவட்ட ஹேண்ட்பால் பரிசளிப்பு விழா
ADDED : ஜன 18, 2025 06:47 AM

ராமநாதபுரம்: மண்டபம் ஹேண்ட்பால் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு ஹேண்ட்பால் (கைப்பந்து) போட்டி பரிசளிப்பு விழா ராமநாதபுரத்தில் நடந்தது.
மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் 12 அணிகள் பங்கேற்றனர். இதில் முதலிடத்தை மண்டபம் ஹேண்ட்பால் அணியினரும், 2வது இடத்தை அரசு மேல்நிலைப்பள்ளி மண்டபம் முகாம் அணி, 3வது இடத்தை ஏ.வி.எம்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியினர் வென்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு சுழல் கோப்பை, பதக்கங்களும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ., சரவணகுமார், ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் தலைவர் ரமேஷ், துணைச் செயலாளர் ராஜன், மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் துணைச் செயலாளர் தாமரைக்கண்ணன், கால் பந்து பயிற்றுனர் ராஜ்குமார் பங்கேற்றனர்.