/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் பெருந்திரள் போராட்டம்
/
மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் பெருந்திரள் போராட்டம்
மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் பெருந்திரள் போராட்டம்
மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் பெருந்திரள் போராட்டம்
ADDED : நவ 12, 2024 04:59 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் குஞ்சரபாண்டியன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜினுவிடம் மனு அளித்தனர்.
அதில், பல லட்சங்களை முதலீடு செய்து வாங்கிய டிராக்டர் உள்ளிட்ட உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. அம்மா மருந்தகம்மக்கள் பயன்பாடு இல்லாதஇடங்களில் அமைக்கப்பட்டு நஷ்டத்தை சந்தித்துள்ளன. அந்த நஷ்டத்தை சங்க செயலாளர்களிடம் வசூலிக்க கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சங்கத்தின் நிதி அவசியமற்ற திட்டங்களில் முடக்கப்பட்டு கிராமப்புறங்களில் நகைக்கடன் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சங்கங்களையும், பணியாளர்களையும் காப்பாற்ற வேண்டும். இதுகுறித்து உயர் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினர்.
முன்னாள் மாவட்டத்தலைவர் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர்கள் கோவிந்தன், முருகேசன்,இணைச்செயலாளர்கள் பாலமுருகன், சந்திரசேகர், ஒன்றிய நிர்வாகிகள்,கூட்டுறவுச் சங்க செயலாளர்கள் பங்கேற்றனர்.