/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட அளவிலான தடகளவிளையாட்டு போட்டிகள்
/
மாவட்ட அளவிலான தடகளவிளையாட்டு போட்டிகள்
ADDED : செப் 01, 2025 10:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை -2025 விளையாட்டு போட்டிகள் ஆக., 25 முதல் செப்.,12 வரை நடக்கிறது. இதன்படி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் தடகளப்போட்டிகளில் நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்டவைகளில் ஏராளமான கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இன்று மாணவிகளுக்கான தடகளப்போட்டிகள் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்துஉள்ளார்.