/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியபட்டினத்தில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி
/
பெரியபட்டினத்தில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி
ADDED : மே 13, 2025 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம் : பெரியபட்டினத்தில் உள்ள மைதானத்தில் மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30 அணிகள் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். முதல் பரிசினை பெரிய பட்டினம் 'ஏ' அணியினரும், இரண்டாவது பரிசினை குப்பன் வலசை அணியினரும், மூன்றாவது பரிசினை கீழக்கரை அணியினரும், நான்காவது பரிசினை பெரியபட்டினம் 'பி' அணியினரும் பெற்றனர். சிறந்த கோல் கீப்பருக்கான விருதினை பி.எப்.சி., யை சேர்ந்த 'ஏ' அணியின் மசூத், சிறந்த வீரர்களுக்கான விருதினை குப்பான்வலசை அணியின் வீரர் மாசாணம் பெற்றனர். வீரர்களை கிராம முக்கியஸ்தர்கள் பாராட்டினர்.