/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட அளவில் கல்லுாரிகளுக்கு இடையிலான கலை போட்டிகள்
/
மாவட்ட அளவில் கல்லுாரிகளுக்கு இடையிலான கலை போட்டிகள்
மாவட்ட அளவில் கல்லுாரிகளுக்கு இடையிலான கலை போட்டிகள்
மாவட்ட அளவில் கல்லுாரிகளுக்கு இடையிலான கலை போட்டிகள்
ADDED : செப் 20, 2024 06:59 AM

கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் மாவட்ட அளவில் கல்லுாரிகளுக்கு இடையிலான கலைப் போட்டிகள் நடந்தது.
முகமது சதக் டிரஸ்ட் சேர்மன் முகமது யூசுப் தலைமை வகித்தார். செயலர் ஷர்மிளா முன்னிலை வகித்தார். அறக்கட்டளை முதன்மை இயக்குனர் ஹாமீது இப்ராஹிம், இயக்குனர் ஹபீப் முகம்மது, முதல்வர் ராஜசேகர், தமிழ் துறை தலைவர் பாலமுருகன், மைக்ரோ பயாலஜி துறை தலைவர் சோபனா, தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் மலர் மற்றும் பேராசிரியர் பிரபாவதி உட்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
குழு மற்றும் தனி நடனம், மீம்ஸ் கிரியேட்டர்ஸ், பேஷன் ஷோ, மாறுவேடப் போட்டி, பென்சில் ஓவியம், மெகந்தி விடுதல், கழிவு பொருட்களைக் கொண்டு கலைநய படைப்புகள், காய்கறி சிற்பம் உள்ளிட்டவைகள் நடந்தது. ஏராளமான மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் மூன்று இடங்களை பிடித்த கல்லுாரி மாணவர்களுக்கு பரிசுகளும், வெற்றிக்கோப்பை சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.