ADDED : ஜன 27, 2026 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள், குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. ராமநாதபுரம்
, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடினர். புரோ கபடி விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. முடிவில் சாத்தங்குடி அணி முதல் பரிசு, சப்பாணி முருகன் பிரதர்ஸ் அணி 2ம் பரிசு, ஏ.புனவாசல் அணி 3ம் பரிசும் பெற்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

