ADDED : பிப் 18, 2026 08:12 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் எம்.எப்.சி., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. முதுகுளத்துார், கடலாடி, பரமக்குடி, கமுதி உள்ளிட்ட ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
ஆர்.எம்.சி., அணி முதல் பரிசு, எம்.எப்.சி., அணி இரண்டாம் பரிசு, மாரியூர் அணி மூன்றாம் பரிசு, பரமக்குடி அணி நான்காம் பரிசும் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எம்.எஸ்.சி.,ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் செய்தனர்.
