தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/விவசாயிகளுக்கு துக்க ஆண்டு

விவசாயிகளுக்கு துக்க ஆண்டு

விவசாயிகளுக்கு துக்க ஆண்டு


ADDED : ஜன 08, 2013 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2013 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : ''தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பயிர்களை காக்க முடியாமல் தற்கொலை செய்ததால், இந்தாண்டு பண்டிகை இல்லாத துக்க ஆண்டாக விவசாயிகள் அனுஷ்டிக்க வேண்டும்'' என, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.

ராமநாதபுரத்தில் நடந்த தேசிய உழவர் தினவிழாவில் அவர் பேசியதாவது:

மழை குறைவான பகுதிகளில் பாரம்பரிய சாகுபடி முறைகளை விவசாயிகள் கையில் எடுத்து கொள்ள வேண்டும். இயற்கை வேளாண் முறையில் உழைத்தால் வீட்டில் அனைவருக்கும் வேலை இருக்கும். சோளம், கம்பு போன்றவைகளுக்கு ரசாயண உரம் தேவையில்லை, கடன் வாங்கவும் தேவையில்லை, உழைப்பு மட்டுமே போதுமானது. ரசாயன உரத்தை பயன்

படுத்திய விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை தவிருங்கள்.

யூரியா வாங்கும் பணத்தில் ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி விட்டால், அதன் உரம், நிலத்திற்கு வளத்தை சேர்க்கும். ரசாயண உரம் நுண்ணுயிர், மண்புழுக்களை கொன்றுவிடுவதால் நிலத்தின் வளம் பாதிக்கப்படுகிறது.

தழிழகத்திற்கு தண்ணீர் தராததால், காவிரி பிரச்னைக்காக போராடி வருகிறோம். நம்

வீட்டில் ஒருவர் இறந்தால் ஒராண்டுக்கு பொங்கல்,

தீபாவளி, கிறிஸ்துமஸ் கொண்டாடாமல் இருப்பதைபோல் இந்தாண்டு

தண்ணீரின்றி விவசாயம் பொய்த்தால்

தற்கொலை செய்த விவசாயிகளுக்காக துக்க ஆண்டாக அனுஷ்டிக்க வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us