தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமேஸ்வரத்தில் பேச்சாளை ஏற்றிய வாகனத்திற்கு அபராதம்

ராமேஸ்வரத்தில் பேச்சாளை ஏற்றிய வாகனத்திற்கு அபராதம்

ராமேஸ்வரத்தில் பேச்சாளை ஏற்றிய வாகனத்திற்கு அபராதம்


ADDED : ஜன 08, 2013 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2013 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் விபத்து ஏற்படும் வகையில் பேச்சாளை மீன் ஏற்றிச் சென்ற ஆறு வாகனத்தை போலீசார் மடக்கி, தலா மூவாயிரம் ரூபாய் வரை வசூலித்தனர்.

ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட இரட்டைமடியில் பேச்சாளை மீன் பிடித்து வருகின்றர்.

ஜெட்டியில் இறக்கி, வெட்ட வெளியில் உலர வைப்பதால், ஈக்கள் உருவாகி தொற்று நோய் பரவுகிறது.

மேலும், பல லட்சம் டன் பேசாளை மீனை உலர வைக்க லாரி, டிராக்டர் மூலம் தூத்துக்குடி கொண்டு செல்லும் போது, வண்டியில் இருந்து வெளியேறும், எண்ணெய் பேன்ற வழுவழுப்பான கழிவு நீர், சாலையில் படிவதால், டூவீலர் மற்றும் வானகங்கள் விபத்தில் சிக்கி பலர் காயம் அடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் பல ஊர் வழியாக வாகனங்கள் செல்லும் போது, மீன் கழிவு துர்நாற்றம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது.

பேச்சாளை மீன் ஏற்றும், வாகனம் மீது நடவடிக்கை எடுக்க மயில்வாகணன் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு பேசாளை மீனை ஏற்றி சென்ற, நான்கு லாரி, இரண்டு டிராக்டர்களை டி.எஸ்.பி., மணிவண்ணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மடக்கி பிடித்து, வாகனத்திற்கு தலா மூவாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அடுத்தமுறை இதே தவறில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என, போலீசார் எச்சரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us