தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஊரை விட்டு ஒதுக்கியதால் "விரக்தி' தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

ஊரை விட்டு ஒதுக்கியதால் "விரக்தி' தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

ஊரை விட்டு ஒதுக்கியதால் "விரக்தி' தற்கொலைக்கு முயன்ற வாலிபர்


ADDED : ஜன 08, 2013 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2013 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கமுதியை சேர்ந்த வாலிபர் காளிதுரை ஊரைவிட்டு ஒதுக்கியதால் மனமுடைந்து உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வெள்ளையாபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் காளிதுரை, 19. டிராக்டர் டிரைவராக உள்ளார். நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

கலெக்டர் நந்தக்குமார் டில்லி சென்றுள்ளதால், டி.ஆர்.ஒ.,விஸ்வநாதன் மனுக்களை பெற்றார். முன்னதாக, டி.ஆர்.ஒ., விவசாயிகள் விழாவிற்கு சென்றுவிட்டதால், அவர் வரும் வரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமால்சாமி மனுக்களை வாங்கினர். அப்போது, மனுவுடன் வந்த காளிதுரை மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென தனது தலையில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்ய முயன்றார். அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த எஸ்.ஐ., லெட்சுமி ஓடிவந்து தடுத்து வாலிபரை காப்பாற்றி அருகில் உள்ள கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

காளிதுரை கூறியதாவது: எங்கள் ஊரில் இடப்பிரச்னைக்காக இரண்டு ஆண்டுகளாக எங்களது குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துள்ளனர்.

ஊரில் நடக்கும் திருவிழா உள்ளிட்ட எந்த விசேஷங்களுக்கும் எங்களை அனுமதிப்பதில்லை. இதுகுறித்து கமுதி போலீஸ் ஸ்டேஷன், அங்குள்ள அதிகாரிகள் என அனைவரிடமும் புகார் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே வாழபிடிக்காமல் தற்கொலை செய்ய முயன்றேன். அதற்குள் போலீசார் தடுத்துவிட்டனர், என்றார்.

டி.ஆர்.ஒ., விஸ்வநாதன் கூறும்போது, '' ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us