ADDED : ஜன 08, 2013 05:51 AM
அ நிறம் | அளவு
தொண்டி : எஸ்.பி.பட்டினத்தில், பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இங்கு
ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. பல
ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டதால், தொட்டியின் கீழ் பகுதி ஈரக்கசிவு
ஏற்பட்டு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. அவ்வப்போது சிமென்ட்
பூச்சுகள் உதிர்ந்து விழுகிறது. இதனால் அப்பகுதியில் செல்வோர் அச்சத்துடன்
செல்கின்றனர்.
ஊராட்சி தலைவர் முகமதுகாசிம் கூறுகையில், 'புதிய நீர் தேக்க தொட்டி கட்ட மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தபட்டுள்ளது' என்றார்.
