திருப்புல்லாணி அருகே ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு "டெங்கு' பாதிப்பு
திருப்புல்லாணி அருகே ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு "டெங்கு' பாதிப்பு
ADDED : ஜன 08, 2013 05:55 AM
கீழக்கரை : ராமநாதபுரம்
மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைக்குளத்தில் ஒரே குடும்பத்தை நான்கு
பேருக்கு 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் மலேரியா
காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கீழக்கரை பகுதியில் சில நாட்களாக
காணாமல் போன 'டெங்கு' காய்ச்சல் மீண்டும் தலை தூக்க துவங்கியுள்ள.
கீழக்கரை, மேலமடையை தொடர்ந்து தினைக்குளத்திலும் 'டெங்கு' காய்ச்சல்
ஏற்பட்டுள்ளது.
திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளம் பள்ளிவாசல்
சாலையில் சித்தி பாத்திமா மகள் பர்ஜானாபேகம், 30. இவரது மருமகள் ரிஸ்வானா
பேகம், 25. பேத்தி, நூகா பானு, 7. நபிசா பானு,4 உள்ளிட்ட ஏராளமானோருக்கு
டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, மதுரை மற்றும் ராமநாதபுரம் தனியார்
மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
ஊராட்சி தலைவர் முனியாண்டி கூறியதாவது;
வீடுகளில்
குடிநீர் குடங்களை திறந்த நிலையில் வைத்து உபயோகப்படுத்துவதால் கொசுக்கள்
உற்பத்தியாகி உள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு,
சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஊராட்சிகளில் குப்பையும்
உடனுக்குடன் அகற்றப்
படுகிறது. டெங்கு பாதிப்பு குறித்து சுகாதாரதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியின் கூறியதாவது:
டெங்கு
பாதிப்பு பகுதியில், சுகாதாரகுழுவினர் முகாமிட்டு கொசு மருந்து, புகை
அடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒரு வாரம் அங்கு தங்கி
கண்
காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.
