ADDED : ஜன 08, 2013 05:55 AM
இளையான்குடி : தாயமங்கலத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்,பாலிதீன் பயன்பாடு அதிகமாக உள்ளது. தாயமங்கலம்
ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
முத்துமாரியம்மன் கோயிலுக்கு சிவகங்கை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து
ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக்
பைகளை அதிகளவில் பயன்படுத்துவதால், பாலிதீன் கழிவுகள் குப்பையாக தேங்கி
சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பாலிதீன் பை, டீ கப்களையும் மாடு,
ஆடுகள் சாப்பிட்டு
அடிக்கடி இறக்கிறது.
ஊராட்சி தலைவர் வசந்தா
கூறுகையில் , '' தாயமங்கலம் ஊராட்சியில் பாலிதீன் , பிளாஸ்டிக்
பொருட்களுக்கு தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,''
என்றார்.வெறும் அறிவிப்போது நின்று விடாமல் பாலிதீன் பயன்படுத்துவோர் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
