/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி
/
மாவட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி
ADDED : ஜன 23, 2026 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான 3ம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி பரமக்குடி ஆயிர வைசிய பி.எட்., கல்லுாரியில் நடந்தது.
முதல்வர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 86 ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி பெற்றனர்.
விரிவுரையாளர்கள் செந்தில்குமார், ராமர் பயிற்றுவித்தனர். சண்முக வேலு, பாரதிராஜா ஒருங்கிணைத்தனர்.

