/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமப்புற இளைஞர்களுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி
/
கிராமப்புற இளைஞர்களுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி
ADDED : ஆக 21, 2025 11:12 PM
ராமநாதபுரம்: கோவை ஈஷா யோகா மையம் சார்பில் ராமநாத புரம் கலெக்டர் அலுவல வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான கைப் பந்து போட்டி நடந்தது.
கிராமப்புற இளைஞர்களை நல் வழிப்படுத்தும் நோக்கத்துடன் ஈஷா யோகா மையம் சார்பில் கைப்பந்து, கபடி, எறிபந்து போட்டிகள் தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதன்படி ராமநாதபுரத்தில் நடந்த கைப்பந்து போட்டியை மாவட்ட இளைஞர் நலம், விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 15 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.9000, 2ம் பரிசு ரூ.6000, 3ம் பரிசு ரூ.3000, 4ம் பரிசு ரூ.2000 வழங்கப்பட்டது.
முதலிடம், 2ம் இடம் பெற்ற அணிகள் மதுரையில் டிச., மாதம் நடை பெறும் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்க உள்ளனர். அப்போட்டியில் வெற்றி பெறும் அணிகள் இடையிலான போட்டி கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட ஈஷா யோகா தன்னார்வ தொண்டர்கள் பாலமுருகன், ஞானசேகரன், ஜெகன், ரம்யா, அனிதா ஆகியோர் செய்தனர்.

