/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் களை கட்டிய தீபாவளி பண்டிகை விற்பனை
/
பரமக்குடியில் களை கட்டிய தீபாவளி பண்டிகை விற்பனை
ADDED : அக் 18, 2025 03:47 AM

பரமக்குடி: பரமக்குடியில் தீபாவளி பண்டிகை விற்பனை களைகட்டுவதால் நகர் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. கூட்ட நெரிசலில் எச்சரிக்கை யுடன் செயல்பட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
பரமக்குடி நகராட்சி மாவட்டத்தில் 36 வார்டுகளுடன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை உள்ளடக்கி இருக்கிறது.
இதே போல் அருகில் உள்ள கிராமப் பகுதியில் இருந்து தினந்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிராம பகுதி மக்களின் பிரதான சந்தையாக பரமக்குடி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக விற்பனை களைகட்டி உள்ளது.
தொடர்ந்து புத்தாடைகள், பட்டாசுகள் முதல் அனைத்து வகையான பொருட்களும் வாங்க மக்கள் காலை முதல் குவிகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மழையால் வியாபாரம் பாதித்த நிலையில் நேற்று மீண்டும் கூட்டம் அதிகரித்தது.
இச்சூழலில் பஸ் ஸ்டாண்ட், கீழப்பள்ளி வாசல் தெரு, காந்தி சிலை வீதி, சின்ன கடை, முத்தாலம்மன் கோயில், மீனாட்சி அம்மன், பெருமாள் கோயில் தெருக்கள் என அனைத்து பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடு பட்டுள்ளனர்.
இதையடுத்து அறிமுகம் இல்லாதவர்கள் யாராவது உதவி செய்வதாக கூறினால் ஏற்றுக்கொள்ள வேண்டாம். மேலும் சந்தேகத்தின் பேரில் யார் தென்பட்டாலும் உட னடியாக அப்பகுதி ரோந்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ்களில் தங் களுடைய உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.