/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீபாவளி சீட்டு மோசடி: பணத்தை மீட்டுத்தர பெண்கள் கோரிக்கை
/
தீபாவளி சீட்டு மோசடி: பணத்தை மீட்டுத்தர பெண்கள் கோரிக்கை
தீபாவளி சீட்டு மோசடி: பணத்தை மீட்டுத்தர பெண்கள் கோரிக்கை
தீபாவளி சீட்டு மோசடி: பணத்தை மீட்டுத்தர பெண்கள் கோரிக்கை
ADDED : அக் 14, 2025 03:55 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் நகரில் பேன்சி கடை நடத்தி வரும் பெண் ஒருவர் 12 மாதங்களுக்கு மாதம் ரூ.1000 கட்டினால் முடிவில் ரூ.15,000 தருவதாக கூறினார்.
இதனை நம்பி காட்டு பிள்ளையார் கோவில் தெரு உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பணம் கட்டியுள்ளனர். தற்போது தீபாவளி நேரத்தில் பணத்தை தராமல் அப்பெண் தலைமறைவாகி விட்டார்.
அவர் ரூ. 70 லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ளதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.