/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவிகளை கேலி செய்வதாக த.மு.மு.க., புகார்
/
மாணவிகளை கேலி செய்வதாக த.மு.மு.க., புகார்
ADDED : செப் 24, 2024 04:32 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவிகளை அப்பகுதியில் உள்ள சிலர் கேலி செய்வதாக த.மு.மு.க., நகர் தலைவர் ஜாகீர்பாபு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் புகார் அளித்தார்.
அவர் கூறியிருப்பதாவது: நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் வருகின்றனர். பள்ளி அருகில் கடைகளில் நிற்பவர்கள் மது அருந்தி விட்டு மாணவிகளை கேலி செய்கின்றனர்.
மாணவிகள் புகார் தெரிவித்ததால் பெற்றோர், பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு பெண் போலீசாரை நியமித்து சில நாட்கள் மட்டும் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அதன் பின் போலீசார் இல்லாத நிலையில் மாணவிகளை கேலி செய்வது தொடர்கிறது.
எனவே காலை, மாலை பள்ளி நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
பள்ளி அருகில் உள்ள தெருவோர கடைகளை 20 அடி தள்ளி மாற்றி அமைப்பதன் மூலம் பள்ளி மாணவிகளை அழைத்துச்செல்லும் வாகனங்கள் போக்குவரத்து இடையூறு இல்லாமல் பயணிக்க முடியும்.
இது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.