/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தி.மு.க., கவுன்சிலர் மகன் கஞ்சா வழக்கில் சிக்கினார்
/
தி.மு.க., கவுன்சிலர் மகன் கஞ்சா வழக்கில் சிக்கினார்
தி.மு.க., கவுன்சிலர் மகன் கஞ்சா வழக்கில் சிக்கினார்
தி.மு.க., கவுன்சிலர் மகன் கஞ்சா வழக்கில் சிக்கினார்
ADDED : பிப் 05, 2025 02:26 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த தி.மு.க., கவுன்சிலர் மகன் உள்ளிட்ட, ஆறு பேரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.
ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில், போலீசார் ரோந்து சென்றபோது அங்கு பதுக்கி வைத்திருந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த முனீஸ்வரன், 30, ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் சத்தியமூர்த்தி மகன் நிதீஷ்குமார், 22, உட்பட ஆறு வாலிபர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.
இதில், சொந்த பயன்பாட்டிற்காக நிதீஷ்குமார் கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததாக போலீசார் கூறினர். இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதால், மேல்விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே, பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் அருகே விற்பனைக்காக டூ - வீலரில் பதுக்கி வைத்திருந்த, 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பாம்பனை சேர்ந்த முத்தையா ரோஷன், 26, திவாஸ்கர், 23, ஆகியோரை கைது செய்தனர்.