/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தி.மு.க., நிர்வாகி மிரட்டல் கலெக்டரிடம் வி.ஏ.ஓ., புகார்
/
தி.மு.க., நிர்வாகி மிரட்டல் கலெக்டரிடம் வி.ஏ.ஓ., புகார்
தி.மு.க., நிர்வாகி மிரட்டல் கலெக்டரிடம் வி.ஏ.ஓ., புகார்
தி.மு.க., நிர்வாகி மிரட்டல் கலெக்டரிடம் வி.ஏ.ஓ., புகார்
ADDED : நவ 22, 2025 12:20 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் மனோகரன் மீது காடமங்கலம் வி.ஏ.ஓ., யூனுஸ், கலெக்டர் சிம்ரன்ஜீத் காலோனிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
தற்போது தேர்தல் கமிஷனின் எஸ்.ஐ.ஆர்., பணிக்காக, பூத் லெவல் ஆபிசராக காடமங்கலத்தில் பணிபுரிகிறேன்.
கமுதி தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் மனோகரன், வாக்காளர்கள் படிவங்களை எடுத்து வைத்து கொண்டு அரசு பணிகளை செய்ய விடாமல் தடுக்கிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க., ஒன்றிய செயலர் மனோகரன் கூறுகையில், ''வி.ஏ.ஒ., தவறான தகவல்களை தந்துள்ளார். அவரை மிரட்டவில்லை. அவர் சரியாக வேலை செய்வது இல்லை. இதுகுறித்து கமுதி தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளேன்,'' என்றார்.