/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கன்னிராஜபுரத்தில் நாய்கள் தொல்லை
/
கன்னிராஜபுரத்தில் நாய்கள் தொல்லை
ADDED : அக் 13, 2025 05:32 AM
சாயல்குடி : சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ஊராட்சி பகுதிகளில் கூட்டமாக சுற்றித் திரியும் வெறி நாய்கள் அவ்வழியாக செல்வோரை விரட்டி கடிக்கின்றன.
கன்னிராஜபுரத்தில் ரோட்டோரங்களில் அதிகமாக சுற்றித் திரியும் வெறி நாய்கள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னிராஜபுரம் ரோஜ்மா நகர் மன்னார் வளைகுடா கடற்கரையோரப் பகுதியில் ஹைமாஸ் விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளது.
இதனால் மீன்பிடித் தொழிலுக்கு செல்லக் கூடிய மீனவர்கள் அலைபேசி வெளிச்சம் மற்றும் டார்ச் லைட் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. எனவே பழுதடைந்துள்ள ஹைமாஸ் விளக்கை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கடலாடி யூனியன் முன்னாள் துணைத் தலைவர் ஆத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.