/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி தெருக்களில் நாய்கள் தொல்லை
/
தொண்டி தெருக்களில் நாய்கள் தொல்லை
ADDED : செப் 26, 2024 04:42 AM

தொண்டி: தொண்டி தெருக்களில் நாய்கள் கூட்டமாக திரிவதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொண்டியில் பல்வேறு தெருக்களில் தெருநாய்கள் கூட்டமாக திரிகின்றன. சுற்றித்திரியும் தெரு நாய்களால் அப்பகுதியில் காலை, மாலையில் நடைபயிற்சி செய்வோர், இவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
இத்தெருக்களுக்கு புதிதாக வருவோரை தெரு நாய்கள் விரட்டிச் செல்கின்றன. மேலும் தெருக்களில் உள்ள குப்பையை நாய்கள் கிளறும்போது உணவுக்காக ஒன்றுக்கொன்று சண்டை போட்டு குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
தொண்டி மக்களை அச்சுறுத்தி தொல்லை கொடுக்கும் வகையில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.