/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்கள் பிடிப்பு
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்கள் பிடிப்பு
ADDED : ஆக 12, 2025 11:12 PM
தினமலர் செய்தி எதிரொலி
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பரமக்குடி ரோடு, டி.டி.மெயின் ரோடு, பஸ்ஸ்டாண்ட் வளாகம், புல்லமடை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்தன.
இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும், வாகன ஓட்டிகளும், கடும் சிரமத்தை சந்தித்து வருவது குறித்தும், தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தியும் சில தினங்களுக்கு முன்பு தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி உத்தரவின் பேரில் நேற்று பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
மேலும் தப்பி ஓடிய நாய்களை பிடிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.