/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்கள் பிடிப்பு
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்கள் பிடிப்பு
ADDED : செப் 25, 2025 11:18 PM
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் டி.டி.மெயின் ரோடு, பரமக்குடி ரோடு, புல்லமடை சாலை, பள்ளிவாசல் தெரு, வாரச்சந்தை பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வந்தன. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது.
மேலும் ரோடுகளின் குறுக்கே செல்லும் நாய்களால் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் எழுந்ததை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி உத்தரவின் பேரில் பேரூராட்சி ஊழியர்கள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தினர்.