/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, இறந்தவர் பெயர் அதிகம்
/
வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, இறந்தவர் பெயர் அதிகம்
வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, இறந்தவர் பெயர் அதிகம்
வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, இறந்தவர் பெயர் அதிகம்
ADDED : நவ 12, 2025 10:49 PM
திருவாடானை: தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நவ.,4 ல் துவங்கியது. திருவாடானை சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்காக செல்லும் பி.எல்.ஓ.,க்களிடம் வாக்காளர்கள் ஆர்வமாக படிவங்களை வாங்கினர். பல ஓட்டுச்சாவடிகளில் இடம் பெயர்ந்த இரட்டை பதிவு மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பி.எல்.ஓ.,க்கள் கூறியதாவது: திருவாடானை கல்லுார் பாரதிநகரில் ஒருவர் பெயர் மூன்று இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரட்டை பதிவும் அதிகமாக உள்ளது. அதே போல் இறந்தவர்களின் பெயர்களும் அதிகம் உள்ளது.
நிறைய பேர் வெளியூர் சென்றுவிட்டனர். அவர்களை தேடி கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. அவ்வாறு இடம் பெயர்ந்து சென்றவர்கள் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யாமல் சென்றுவிட்டனர் என்றனர்.