/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தேரிருவேலியில் நெல் வயல்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்
/
தேரிருவேலியில் நெல் வயல்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்
தேரிருவேலியில் நெல் வயல்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்
தேரிருவேலியில் நெல் வயல்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்
PUBLISHED ON : அக் 17, 2025 12:00 AM

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே தேரிருவேலி அருந்ததியர் குடியிருப்பு அருகே விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் ஊராட்சி நிர் வாகத்தினர் ஈடுபட்டனர்.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட தேரிருவேலி, காக்கூர், பூக்குளம், இளஞ்செம்பூர், நல்லுார், கீழத்துாவல் உட்பட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிலங்கள் உழவு செய்யப்பட்டு நெல் விதைப்பு செய்தனர். தற்போது பயிர்கள் முளைக்க துவங்கியுள்ளது.
முதுகுளத்துார் பகுதியில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் தேரிருவேலி அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் 20 ஏக்கரில் நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.
வயல்களில் தேங்கிய தண்ணீர் செல்ல வழியில்லாததால் முளைக்க தொடங்கிய பயிர்கள் அழுகி வருவதால் பாதிப்பு ஏற்பட்டது. துார்வாரப் படாததால் தேங்கும் மழைநீர் செல்ல வழியில்லாமல் விவசாய நிலத்தில் தேங்கி யுள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக ஊராட்சி சார்பில் மழைநீர் செல்வதற்கு வசதியாக மணல் அள்ளும் இயந்திரம் மூலம் கால்வாய் துார் வாரப்பட்டு அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகள் செய்தனர்.