நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி முதுகலை ஆங்கிலத் துறையும் ராமநாதபுரம் மாவட்ட கூடுகை அறக்கட்டளையும் இணைந்து ஹென்றிக் இப்ஷன் எழுதிய 'பொம்மை வீடு நாடகம்' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் ஸ்டாலின் வரவேற்றார்.
முதல்வர் பாலகிருஷ்ணன்,மாற்று ஊடக மைய இயக்குநர் காளீஸ்வரன் மாணவர்களுக்கு நாடகக் கலை பயிற்சியளித்தார்.
தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் சானாஸ் பரூக், கூடுகை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் வான்தமிழ் இளம்பரிதி, நிர்வாக இயக்குனர் லெனின் ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.