தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/குடிநீர் கேன்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்

குடிநீர் கேன்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்

குடிநீர் கேன்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்


UPDATED : நவ 29, 2026 02:58 PM

ADDED : நவ 29, 2026 02:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 02:58 PM ADDED : நவ 29, 2026 02:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாயல்குடி: சாயல்குடி, கடலாடி, சிக்கல் உள்ளிட்ட இடங்களில் நாள்பட்ட குடிநீர் கேன்களையும் விற்பனை செய்வதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கே வண்டும்.

மேற்கண்ட இடங்களில் 20 லி., கொள்ளளவு கொண்ட குடிநீர் கேன்கள் அதிக அளவு விற்கபடுகிறது. பல்வேறு கம்பெனிகளின் பெயரில் ஆர்.ஓ., எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களை பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அவற்றின் அடிப்பகுதியில் பாசி படர்ந்தும் விற்பனை செய்யப்படும் போக்கு தொடர்கிறது. சாதாரண நீரில் உள்ள அதிகப்படியான கரைந்த உப்புகள், கன உலோகங்கள் நுண்ணுயிரிகள் மற்றும் மாசுகளை எதிர் சவ்வூடு பரவல் மூலமாக பிரித்தெடுத்து சுத்திகரிக்கப்பட்ட நீராக வருகிறது.

இந்நிலையில் நாள்பட்ட குடிநீர் கேன்களையும் விற்கின்றனர்.

பெரும்பாலான குடிநீர் கேன்களில் தயாரிப்பு தேதி குறிப்பிடுவதில்லை.

இவற்றை பயன்படுத்தக்கூடிய பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே குடிநீர் பாட்டில்கள் மற்றும் கேன்களில் விற்பனை செய்யக்கூடிய தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்து தரத்தினை முறையாக பரிசோதனை செய்திட உணவுபாதுகாப்புதுறையினர், ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us