UPDATED : ஜூன் 29, 2026 07:07 PM
ADDED : ஜூன் 29, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தற்போது கோடை காலமாக உள்ளதால் பக்தர்கள் வசதிக்காக அம்மன் சன்னதி, மரகத நடராஜர் சன்னதி நுழைவாயில், மகா மண்டபம் பிரதான நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தாகம் தீர்க்கும் நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
