/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
யூனியன் அலுவலகத்தில் குடிநீர் வசதி தேவை
/
யூனியன் அலுவலகத்தில் குடிநீர் வசதி தேவை
ADDED : ஏப் 25, 2025 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள்பயன்பெறும் வகையில் கோடை காலத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.
திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்திற்கு வேலை நாட்களில் ஏராளமான பொதுமக்கள்மற்றும் பயனாளிகள் வந்து செல்கின்றனர்.
பொதுமக்களின் வசதிக்காக கோடை கால குடிநீர் வசதி ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.
அருகில் உள்ள கடைகளுக்கு சென்று விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே கோடை காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி புதிதாக குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

