/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நகராட்சி குழாய் உடைந்து ராமேஸ்வரத்தில் குடிநீர் வீண்
/
நகராட்சி குழாய் உடைந்து ராமேஸ்வரத்தில் குடிநீர் வீண்
நகராட்சி குழாய் உடைந்து ராமேஸ்வரத்தில் குடிநீர் வீண்
நகராட்சி குழாய் உடைந்து ராமேஸ்வரத்தில் குடிநீர் வீண்
ADDED : பிப் 21, 2025 07:00 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சி ரூ.40 லட்சத்தில் அமைத்த குடிநீர் குழாய் உடைந்து காவிரி குடிநீர் ரோட்டில் பெருக்கெடுத்தது.
ராமேஸ்வரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 300க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் உள்ளது. இத்தெருக் குழாய்களுக்கு காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் ராமர் தீர்த்தம் தெரு, சின்னவன் பிள்ளை தெரு, முஸ்லிம் தெருவுக்கு குடிநீர் விநியோகிக்க ராமேஸ்வரம் நகராட்சி நீர்த் தேக்க தொட்டி முதல் திட்டக்குடி வழியாக ஓராண்டுக்கு முன்பு ரூ.40 லட்சத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குடிநீர் குழாய் அமைத்தனர்.
இந்த குழாயில் 5 நாட்களுக்கு முன்பு திட்டகுடியில் வாகனம் மோதி குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து வீணாகியது. கோடை காலம் துவங்கிதால் இனிமேல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதுபோன்று வீணாகும் குடிநீரை பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

