/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்பாலைக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு
/
திருப்பாலைக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : மே 16, 2025 03:04 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை பகுதியான திருப்பாலைக்குடி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடற்கரை மீனவ கிராமமாக இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உப்பு நீராக உள்ளதால் மழைக்காலங்களில் ஊருணியில் தேங்கும் நீர் மற்றும் கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீர் ஆகியவற்றை முழுமையாக நம்பி இருக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில், காவிரி கூட்டு குடிநீரும், கடந்த சில மாதங்களாக முறையாக சப்ளை செய்யப்படாததால் குடிநீருக்கு அப்பகுதியினர் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். வெளியூர்களில் இருந்து விற்பனை செய்யப்படும் பாதுகாப்பற்ற டேங்கர் தண்ணீரை குடம் ரூ.13 வரை கொடுத்து பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.
அதிகாரிகள் அப்பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.