/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
6 ஊராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை
/
6 ஊராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை
ADDED : டிச 26, 2024 04:38 AM
திருவாடானை: ஆறு ஊராட்சிகளுக்கு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பழுதான மோட்டார் சரி செய்யபட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
திருவாடானை அருகே குளத்துார், திருவெற்றியூர், முகிழ்த்தகம், புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு ஆகிய ஊராட்சிகளுக்கு குளத்துார் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததால் கிராம மக்கள் சிரமம் அடைந்தனர்.
முகிழ்த்தகம் கிராம மக்கள் கூறுகையில், குடிநீர் வராததால் சில நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே தேங்கிய நீரை குடங்களில் சேகரித்து எடுத்து வருகிறோம். குடிநீர் கிடைக்காமல் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்படுகிறோம் என்றனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் டிச.20ல் வெளியானது. இதன் எதிரொலியாக பழுதான மோட்டாரை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் முதல் குடிநீர் சப்ளை செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

