/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் வேனில் கடத்திய டிரைவர் கைது
/
1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் வேனில் கடத்திய டிரைவர் கைது
1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் வேனில் கடத்திய டிரைவர் கைது
1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் வேனில் கடத்திய டிரைவர் கைது
ADDED : டிச 02, 2024 04:26 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சரக்கு வேனில் கடத்தி சென்ற 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் ராஜேஷ்குமாரை 28, கைது செய்தனர்.
கொடிக்குளம் சாலையில் திருவாடானை எஸ்.ஐ. சுந்தரமூர்த்தி, கோவிந்தன், தனிப்பிரிவு ஏட்டு அருண்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பகுதி வழியாக சென்ற சரக்கு வேனை சோதனை செய்த போது 50 கிலோ எடையுள்ள 25 மூடைகள் கொண்ட 1250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
சிவகங்கை மாவட்டம் புதுவயல் அரிசி ஆலைக்கு கடத்தி கொண்டு சென்ற மூடைகளை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் கடலாடி அருகே பாடுவனேந்தலை சேர்ந்த ராஜேஷ்குமாரை கைது செய்து, உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.