ADDED : ஜூலை 01, 2026 04:29 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வீட்டின் குறுக்கே வேலி அமைத்ததைக் கண்டித்து ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் கண்ணன் கோயில் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன் 65. ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவரது வீட்டின் முன் பகுதியில் கோயிலுக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. வீட்டிற்குள் செல்வதற்கு வேறு பாதை வசதி இல்லாததால் அந்த வழியை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் காலியாக உள்ள நிலத்தில் வேலி அமைக்க முயன் றுள்ளனர்.
வீட்டிற்கு செல்வதற்காக 5 அடி வேண்டும் என கேட்டுள்ளார். கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வேலி அமைக்கும் பணியை துவக்கினர். இதனால் மனமுடைந்த லெட்சுமணன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
