/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்
/
5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்
ADDED : மார் 27, 2025 03:05 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் சரக்கு வாகனத்தில் மதுரைக்கு கடத்த இருந்த 5 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். டிரைவர் தப்பி ஓடினார்.
ராமநாதபுரம் பறக்கும் படை தாசில்தார் தமீம்ராஜா, துணை தாசில்தார் பிரசாத், ஆர்.ஐ., முத்துராமலிங்கம் கேணிக்கரை பகுதி யில் வாகன சேதனையில் ஈடுபட்டனர். அங்கு வந்த பின்பகுதி மூடப்பட்டிருந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தினர். உடனடியாக நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். வாகனத்தை சோதனையிட்டதில் 85 மூடைகளில் 5 டன் ரேஷன் அரிசி இருந்தது. மதுரைக்கு கடத்தப்பட இருந்ததை பறிமுதல் செய்து நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். சரக்கு வாகனம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் தொடர்புடைய டிரைவர் உள்ளிட்டோரை தேடுகின்றனர்.