/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பூட்டிய ஏ.சி., காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரைவர்
/
பூட்டிய ஏ.சி., காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரைவர்
பூட்டிய ஏ.சி., காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரைவர்
பூட்டிய ஏ.சி., காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரைவர்
ADDED : டிச 28, 2024 01:22 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் ஏ.சி., காருக்குள் டிரைவர் அபிசேஷ் 41, மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமேஸ்வரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் அபிசேஷ் வாடகை கார் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று முன் தினம்ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு சவாரி ஏற்றி சென்றார்.
மதுரையிலிருந்து காரில் ராமேஸ்வரத்திற்கு திரும்பிய போது சத்திரக்குடி பகுதியில் ரோட்டோரத்தில் உள்ள செட்டிநாடு உணவகம் பகுதியில் காரை நிறுத்தினார். ஏ.சி., யை ஓடவிட்டு காருக்குள் அமர்ந்தவர் வெளியே வரவில்லை. நீண்ட நேரம் கார் நிற்பதை அறிந்தவர்கள் சத்திரக்குடி போலீசாரிடம் தெரிவித்தனர்.
போலீசார் கார் கதவை உடைத்து பார்த்த போது காருக்குள் அமர்ந்த நிலையில் அபிசேஷ் இறந்தார்.
அவரது அருகில் உள்ள சீட்டில் மதுபான பாட்டில், சினாக்ஸ் கப், தண்ணீர் போன்றவை இருந்தன. அளவுக்குதிகமான மது போதையால் அவர் இறந்தாரா, காருக்குள் ஏ.சி., போடப்பட்டதால் மூச்சு திணறி இறந்தாரா, கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தான் அவர் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.