/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போக்சோ வழக்கில் டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
/
போக்சோ வழக்கில் டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : அக் 17, 2024 05:17 PM

ராமநாதபுரம்:சிறுமியை கர்ப்பிணியாக்கிய போக்சோ வழக்கினை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம், ஆக்டிங் டிரைவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே புளியங்குடி கிராமத்தை சேர்ந்த மும்மூர்த்தி மகன் கோகுலகண்ணன் 24, இவர் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்து விட்டார்.இதில் சிறுமி கர்ப்பிணியானார். வழக்கை விசாரித்த முதுகுளத்துார் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து கோகுலகண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி கோபிநாத் சிறுமியை கர்ப்பிணியாக்கிய கோகுலகண்ணனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.

