/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வன உயிரின கோட்டத்தில் டிரைவர் வேலை
/
வன உயிரின கோட்டத்தில் டிரைவர் வேலை
ADDED : ஆக 14, 2025 11:27 PM
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா வன உயிரினக் கோட்டம், உயிர்கோள காப்பகம், முன்னேற்றத்திற்கான மாவட்டங்கள் திட்ட சுழல் மேம்பாட்டு குழுவினருடன் இணைந்து தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை பயணிகள் பஸ் இயக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்பஸ்களை இயக்க டிரைவர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். 18 முதல் 25 வயது வரை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு கனரக வாகனம் இயக்கிய அனுபவம் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.18,500.
விருப்பமுள்ளவர்கள் ஆவணங்களுடன் ராமநாதபுரம் வன உயிரினக் கோட்டம், உயிர்கோள காப்பாளர் அலுவலகத்தில் ஆக.,20ல் நடைபெறும் நேர்முகத்தேர்வில் காலை 10:00 முதல் மதியம் 12:00 மணிக்குள் பங்கேற்கலாம். ராமேஸ்வரம் பகுதியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை.