ADDED : ஏப் 23, 2025 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தை சேர்ந்த புரோகிதர் ஸ்ரீராம் 45. மகள் முத்துலட்சுமி 15, இருவரும் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு காரில் சென்று இரவு ராமேஸ்வரம் திரும்பினர். காரை ராமேஸ்வரம் டிரைவர் முத்துராமலிங்கம் 55, ஓட்டினார்.
தங்கச்சிமடத்தில் கார் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வீட்டு சுவர் மீது மோதியதில் டிரைவர் உயிரிழந்தார். காயமடைந்த ஸ்ரீராம், முத்துலட்சுமி ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தங்கச்சிமடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

