/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மரத்தில் மோதியது மீன் லாரி போராடி மீட்கப்பட்ட டிரைவர்
/
மரத்தில் மோதியது மீன் லாரி போராடி மீட்கப்பட்ட டிரைவர்
மரத்தில் மோதியது மீன் லாரி போராடி மீட்கப்பட்ட டிரைவர்
மரத்தில் மோதியது மீன் லாரி போராடி மீட்கப்பட்ட டிரைவர்
ADDED : ஜூன் 04, 2025 12:52 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மரத்தில் மீன் லாரி மோதியதில் சிக்கிக் கொண்ட டிரைவர் 2 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.
நாகபட்டினத்தில் இருந்து மீன் ஏற்றிச் சென்ற மினி கன்டெய்னர் வாகனம் தொண்டி- திருவாடானை வழியாக கேரளாவிற்கு சென்று அங்கு மீன்களை இறக்கி விட்டு மீண்டும் நாகபட்டினத்தை நோக்கி சென்றது. மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை வழியாக சென்ற போது பாரதி நகரில் சென்ற போது துாக்க கலக்கத்தில் டிரைவர் இருந்ததால் கட்டுபாட்டை இழந்த வாகனம் ரோட்டோர வேப்ப மரத்தில் மோதியது.
இதில் லாரியின் முன்பக்கம் சேதமடைந்து டிரைவரின் கால் சிக்கி கொண்டது. திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் முருகானந்தம் மற்றும் வீரர்கள் சென்று 2 மணி நேரத்திற்கு பிறகு டிரைவரை மீட்டனர். காயமடைந்த டிரைவர் நாகபட்டினத்தை சேர்ந்த சிவானந்தம் 45, திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.