/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒரு மாதமாக மூடப்படாத பள்ளம் விபத்து அச்சத்தில் வாகனஓட்டிகள்
/
ஒரு மாதமாக மூடப்படாத பள்ளம் விபத்து அச்சத்தில் வாகனஓட்டிகள்
ஒரு மாதமாக மூடப்படாத பள்ளம் விபத்து அச்சத்தில் வாகனஓட்டிகள்
ஒரு மாதமாக மூடப்படாத பள்ளம் விபத்து அச்சத்தில் வாகனஓட்டிகள்
ADDED : செப் 07, 2025 10:44 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கேணிக்கரை - ஓம்சக்தி நகர் ரோட்டின் நடுவே தோண்டப்பட்ட பள்ளம் ஒரு மாதமாக மூடாமல், தடுப்புகள் ஏதும் அமைக்காமல் உள்ளதால் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவர்கள் விபத்து அச்சத்தில் பயணிக்கின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிக்கான குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. கேணிக்கரை பகுதியில் இருந்து ஓம் சக்தி நகர் வரை செல்லும் ரோட்டின் ஓரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது அங்குள்ள பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது. அதனால் கழிவுநீர் வெளியேறுவதை சரிசெய்வதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டது.
தற்போது ஒரு மாதமாகியும் அடைப்பை சரிசெய்யப்படாததால் பள்ளம் மூடாமல் கழிவுநீர் குளம் போல் தேங்கி யுள்ளது.
பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் எதுவும் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் விபத்து நடக்க வாய்ப்புள்ளது.
நகராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை சரிசெய்து பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.