ADDED : மார் 04, 2026 05:21 AM
ஆர்.எஸ்.மங்கலம்: வறட்சியால் கோடை உழவுப் பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந் துள்ளனர்.
மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மகசூல் நிலையை எட்டியதை தொடர்ந்து, திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டன. தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெல் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில், களைகள் முளைக்காத வகையில், கோடை உழவு செய்ய ஆயத்தம் ஆகி வருகின்றனர்.
இதனால், கோடை உழவு மேற்கொள்வதற்கு ஏற்ற ஈரப்பதம் வயல் களின் இல்லாததால் உழவு பணியை மேற்கொள்ள முடியாத நிலையில் விவசாயிகள் பாதிப்படைந் துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மழையின்றி தொடர் வறட்சி நிலவுவதால் விளை நிலங்கள் அனைத்தும் வறண்டுள்ளதால், கோடை உழவு பணியை மேற்கொள்ள முடியவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
