ADDED : டிச 08, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் உய்யவந்த அம்மன் கோயில் அருகில் உள்ள குளத்தில் குளித்தவர் மூழ்கி பலியானார்.
எமனேஸ்வரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நாகூர் கனி மகன் ஷேக்அலாவுதீன் 40. இவருக்கு திருமணமாகி 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
வேலைக்காக அடிக்கடி வெளிநாடு சென்று வந்தவர் நேற்று மாலை மது அருந்திய நிலையில் உய்யவந்த அம்மன் கோயில் அருகில் உள்ள குளத்தில் குளித்தார்.
நீண்ட நேரமாக வெளியே வராததால் அவரது நண்பர்கள் தண்ணீரில் இருந்தவரை துாக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.